மறைமுகத் தேர்தல் என்பது குதிரை பேரம் நடக்க வழிவகுக்கும். பணம் முக்கிய பங்கு வகிக்கும். கொள்கை, கோட்பாடுகளுக்கு இடம் இருக்காது. வசதி படைத்தவனுக்கு வாய்ப்பும் பணமும் கிடைக்கும் என்பதுதான் நிலைமை.
மறைமுகத் தேர்தலும் ஜனநாயகம்தான்! திருமாவை திருப்பியனுப்பிய நீதிமன்றம்!

அதனால், நகராட்சித் தலைவர், மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இன்று அதனை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளை எடுத்துக்கொண்டிருப்பதால், தனது விசாரணை தேவையில்லை என்று சொன்னதோடு உயர்நீதிமன்றம் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. இதில் ஜனநாயகத்துக்கு எதிராக எதுவும் இல்லை என்று கருத்துக் கூறியிருக்கிறது. மறைமுகத் தேர்தல் ஜனநாயகத்துக்கு எதிரானது இல்லை என்றால், எதுதான் ஜனநாயகத்துக்கு எதிரானது?