பொதுத் தேர்வில் காப்பி அடித்த மாணவனுக்கு ஓராண்டு சிறை! பகீர் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

மும்பை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பி அடித்த இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2014ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி மும்பை கண்டிவிலி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 அல்ஜீப்ரா தேர்வின்போது, ஒரு மாணவன் காப்பி அடித்த புகாரில் சிக்கினான். இதன்பேரில்,சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அந்த மாணவன் மீது போலீசில் புகார் அளித்தது.

ஏற்கனவே பிளஸ் 2 பொதுத் தேர்வில் தவறிய நிலையத்தில், அந்த மாணவனுக்கு, ஒரு கூடுதல் வாய்ப்பை பள்ளி நிர்வாகம் வழங்கியபோதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 

இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாணவனுக்கு, தற்போது ஓராண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.