நீட் விலக்கு கிடையாது, தமிழக அரசுக்கு மரியாதை அம்புட்டுத்தான்... வேலூரிலும் சங்குதான்.

தமிழகத்தில் நீட் விலக்கு வாங்குவதற்கு முயற்சி செய்வோம் என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் அவ்வப்போது சொல்லி வந்தனர்.


அவர்கள் வாய்க்கு பூட்டு போடும் வகையில் ஒரு காரியத்தை செய்துவிட்டது மத்திய அரசு. ஆம், தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியிருந்த நீட் விலக்கு மசோதாவை நிராகரித்துவிட்டதாக நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது மத்திய அரசு என்பதுதான்.

இந்த விவகாரம் எதுவுமே தெரியாமல்தான் தமிழக அரசு இன்னமும் வாய் கிழிய பேசிவருகிறது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று நேரடியாக சொல்லாமல், நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது ஏன் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பை மட்டுமே வைத்து தமிழகத்தை மோடி அரசு பழிவாங்குகிறது என்று சொல்லமுடியும். ஓட்டு போடாத தமிழ் மக்களுக்கு எதற்காக நீட் விலக்கு தரவேண்டும் என்பதுதான் மோடியின் எண்ணமாக இருக்கும்.

இந்த லட்சணத்தில் தமிழகத்தில் தாமரையை மலர வைப்பேன், தாமரை மலர்ந்தே தீரும் என்று தலையை விரித்துப்போட்டு தமிழிசை கத்துவதால் மட்டும் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது? வேலூரிலும் சங்கு ஊதும் சத்தம் இப்போதே பா.ஜ.க.வுக்கு கேட்டிருக்குமே...