ஜான்சன் அன்ட் ஜான்சன் மருந்து! தீராத பக்கவிளைவு! ரூ.50 ஆயிரம் கோடி அபராதம்! மலைக்க வைத்த உத்தரவு!

பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு அமெரிக்கா நீதிமன்றம் 56 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கு தேவையான சோப் பவுடர் மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றையும் பெரியவர்களுக்கு தேவையான பல்வேறு மருந்து பொருட்களையும் உற்பத்தி செய்து விநியோகித்து வருகின்றது. இவ்வாறு இருக்கையில் இந்நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பற்றதாக உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரிஸ்பிரிடால் என்ற பொருள் பக்கவிளைவை ஏற்படுத்துவதாக கூறி நீதிமன்றத்தில் நிக்கோலோ முர்ரே என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 56 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது.

ஆனால் இது தங்கள் நிறுவனத்தின் மீதான தவறான குற்றச்சாட்டு தங்கள் தரப்பு ஆதாரங்களை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.