கணவனுக்கு 1 நாளைக்கு 2 வேளையும் 8 லட்டுகள் தான் சாப்பாடு! விநோத மனைவியால் ஏற்பட்ட விபரீதம்!

உத்தர பிரதேச மாநிலம் மீரூட் பகுதியில் தான் விரும்பியடி லட்டு தராததால் மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றுத் தர வேண்டும் என நீதின்றத்தை ஒருவர் அணுகிய ருசிகர சம்பவம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தின் மீருட் பகுதியை சேர்ந்த ஒருவர் கூலித் தொழில் செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் அந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளது. இவருக்கு லட்டு என்றாலே அலாதி பிரியம்.

அதனால் தான் செல்லும் இடங்களில் எல்லாம் அடிக்கடி லட்டு வாங்கி சாப்பிடுவார். அது மட்டுமின்றி வீட்டிலும் அடிக்கடி லட்டு செய்து தருமாறு மனைவியிடம் கேட்டு சாப்பிட்டு வந்துள்ளார்.

ஒரு கால கட்டத்தில் லட்டு சமைக்க முடியாமல் திணறிய அவரின் மனைவி திடீரென லட்டு கொடுப்பதை குறைத்தார். அதாவது காலை மாலை என 2 வேளை மட்டும் 8 லட்டுகள் மட்டுமே கணவருக்கு கொடுத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அந்த கூலித் தொழிலாளி லட்டு செய்து தராத மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றுத் தருமாறு குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.

எதற்காக விவாகரத்து வேண்டும் என நீதிமன்றம் கேட்டபோது தான் விரும்பிய உணவை தராததால் விவாகரத்து வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்படி என்ன உணவு உங்களுக்கு வேண்டும் என கேட்டதற்கு தான் கேட்கும்பொழுதெல்லாம் லட்டு தருவதில்லை எனவும் காலை மற்றும் மாலை வேளையில் மட்டுமே லட்டு கொடுப்பதால் தான் வேதனை அடைந்துள்ளதாகவும் தெரிவித்ததார்.

இதை கேட்ட நீதிமன்ற நீதிபதி மற்றும் ஊழியர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் அவரது மனைவியை அழைத்து விசாரித்து உள்ளனர். அதற்கு அவர் மனைவி கூறிய பதில் மேலும் நகைப்புள்ளாக்கியது. அதாவது 2 வேளைக்கு மட்டும் லட்டு சாப்பிட்டால் கணவரின் ஆயுள் நீடிக்கும் என ஒரு மந்திரவாதி சொன்னதாகவும் அதன் அடிப்படையிலேய தன் கணவருக்கு லட்டு கொடுப்பதில் கட்டுப்பாடுடன் இருப்பதாகவும் சொல்லி சமாளித்தார்.

இருவரிடம் விசாரணை நடத்திய நீதிமன்றம் இருவர் மனநிலையும் தாங்கள் செய்வது சரி என்ற அடிப்படையிலேயே இருப்பதாகவும் அடுத்து வரும் காலங்களில் இந்த தம்பதிக்கு போதிய கவுன்சிலிங் கொடுத்து இருவரும் ஒருவரை ஒருவரை விட்டுக் கொடுக்கும் வகையில் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்தது