ஷேர் மார்கெட்டில் லாஸ்..! மாசம் ரூ.1 லட்சம் வட்டி! கடன் கொடுத்தவர்களுக்கு உருக்கமான கடிதம்! பிறகு கணவன்-மனைவியின் விபரீத முடிவு!

கடன் தொல்லையால் சென்னை அருகே கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை கடிதம் தற்போது போலீஸார் கையில் சிக்கியுள்ளது.

சென்னை ஓட்டேரி பகுதி அருகே வசித்து வந்தவர் சந்திரன். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.  

இவர் வீட்டில் சித்ரா என்ற பணிப்பெண் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்கம்போல நேற்று காலை வீட்டு வேலை பார்ப்பதற்காக சந்திரன் வீட்டிற்கு சித்ரா வந்த போது வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் சந்திரன் மற்றும் விஜயலட்சுமி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

இது குறித்து உடனடியாக அருகிலிருந்த காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார் சித்ரா. இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டை சோதனை இடுகையில் தற்கொலை செய்வதற்கு முன்பு இவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. 

அதில், மாதம்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேலாக வட்டி கொடுத்து வருவதாகவும் தான் வாங்கிய கடன் அசல் சற்றும் குறையவில்லை என்பதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. 

மேலும் அதில் இந்த கடனுக்கு தனது மகள் மற்றும் மகனை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தை எடுத்துக்கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.