தவறவிட்ட 52 பவுன் நகை! கதறிய இளம் பெண்! காவல் நிலையத்தில் இன்ப அதிர்ச்சி! நெகிழ வைத்த எழை தொழிலாளர்கள்!

காரைக்குடியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தவறவிட்ட 52 பவுன் நகைபையை அந்த வழியே வந்த இருவர்கள் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


காரைக்குடியை சேர்ந்த ஆரோக்கிய செல்வகுமார் மற்றும் அவரது மனைவி மரியராணி இருவரும் தங்களது உறவினர் வீட்டிற்கு செல்ல தனது கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்த சுமார் 52 பவுன் நகைகளையும் தங்களுடன் எடுத்துச்சென்றுள்ளனர்.

அப்போது போகும் வழியில் மரியராணி கையில் வைத்திருந்த பை கீழே நழுவுயுள்ளது இதையடுத்து சிறிது தூரம் சென்ற நிலையில் திடீரென தனது பையை காணவில்லை என மரியராணி பதற்றத்துடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .பின்னர் பையை தேடி திரும்பி அதே வழியில் வந்துள்ளனர்.

சிறிது தூரம் வந்த பிறகு தங்களது நகைப்பை கிடைக்காத விரக்தியில் இருவரும் கல்லல் பாலம் காவல் நிலையத்திற்கு சென்று தங்களது நகைப்பை தொலைத்து விட்டதாக புகார் கொடுக்க சென்றுள்ளனர். 

அப்போது அவர்களுக்கு ஒரு பேரின்பம் காத்திருந்தது அது என்னவெனில் இருவரும் தங்களது நகைகளை காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கச் சென்ற நிலையில் அங்கு அவர்களது நகையை அதே பகுதியில் பிளம்பர்களாக வேலை பார்க்கும் நபர்கள் காவல்நிலையத்திற்கு எடுத்து வந்து ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் யாரென விசாரிக்கையில் அதே பகுதியில் பிளம்பர்வேலை பார்க்கும் நபர்கள் என்பது தெரியவந்தது இதையடுத்து செல்வகுமார் மற்றும் மரியராணி இருவரும் தங்களை நகை தான் என்பதை உறுதி செய்த பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது பல்வேறு விதமாக திருட்டுச் சம்பவங்கள் ஏற்பட்டு வந்தாலும் இதுபோல் சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என காவல்துறையினர் அவர்களை பாராட்டி வழியனுப்பி வைத்தனர் .மற்றும் நகைப்பை உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.