8 வாளிகளில் துண்டு துண்டாக இளம் பெண்களின் உடல்கள்! தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச் சென்ற தம்பதி! பதற வைக்கும் வாக்குமூலம்!

இளம் பெண்களின் இதயங்களை நாய்க்கு இரையாக்கிய தம்பதிக்கு 654 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மெக்சிகோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


ஜூன் கார்லஸ் ஹெர்னான்டஸ் பேஜர் மற்றும் அவரது மனைவி பேட்ரிகா மேர்டினெஸ் பெர்னால் இருவரும் மனித உறுப்புகளை தள்ளுவண்டியில் எடுத்து சென்றபோது கடந்த ஆண்டு போலீசாரிடம் சிக்கினர். பின்னர் அவர்கள் வீட்டை ஆய்வு செய்தபோது ஏராளமான மனித உடல் உறுப்புகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

பெண்களை கொன்று அவரது உடல் உறுப்புகளை வாளியில் வைத்து புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வாசனை திரவியம் விற்பதாக கூறி இளம்பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அந்த உடல்களை துண்டு துண்டாக வெட்டி புதைத்து விடுவதும் வழக்கம் என தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி ஒரு பெண்ணை கொலை செய்வதற்கு முன்னர் ஆசை தீர பாலியல் வன்கொடுமை செய்வது கணவர் ஜூன் கார்லசின் விருப்பமாம். இதை அடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில் இருவருக்கும் மனநல பிரச்சனை இருந்ததால் இப்படி சைக்கோ போல் செயல்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த மெக்சிகோ நீதிமன்றம் ஜூன் கார்லஸ் ஹெர்னான்டஸ் பேஜர் - பேட்ரிகா மேர்டினெஸ் பெர்னால் தம்பதிக்கு 654 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும் இந்த தம்பதியால் வெட்டப்பட்ட பெண்கள் யார் யார் என அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட உறவினருக்கு தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.