கணவன் - மனைவி உல்லாச வீடியோ..! செல்போனில் வைத்து மிரட்டிய நபருக்கு ஏற்பட்ட பயங்கரம்!

பெங்களூரு: சீட்டு பணத்தை திருப்பிக் கேட்ட நபரை ஆத்திரத்தில் கொன்ற கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.


பெங்களூருவின் நந்தினி லே அவுட் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நவம்பர் 15ம் தேதியன்று அங்குள்ள மவுண்ட் சினோரியா  ஸ்கூல் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் ரத்தம் கசிந்த நிலையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்திருக்கிறது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து மூட்டையை பரிசோதித்தபோது, அதில், 31 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  

இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் பெயர் சந்தோஷ் என்றும், கேப் டிரைவராக பணிபுரிந்து வந்தார் எனவும் விவரம் கிடைத்தது. இதுபற்றி கேள்விப்பட்ட சந்தோஷின் தந்தை கலிங்க கவுடா தனது மகனை கொன்றதாகக் கூறி சந்தோஷின் மனைவி யமுனா மற்றும் மாமியார் ஷியாமளா மீது சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சந்தோஷின் மனைவி யமுனாவை போலீசார் விசாரித்தனர். அப்போது உண்மை வெளிவந்தது.  

ஆம், கேப் டிரைவராக இருந்தாலும், பகுதி நேரமாக தனியார் ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்றில் லட்சக்கணக்கான பணத்தை சந்தோஷ் முதலீடு செய்திருக்கிறார். அவரை நம்பி நண்பர்கள், உறவினர்களும் பணத்தை முதலீடு செய்திருந்துள்ளனர். ஆனால், அந்த சீட்டு கம்பெனி திடீரென மூடப்படவே, தன்னை நம்பியவர்களுக்கு பணம் தர வேண்டிய நெருக்கடி சந்தோஷ்க்கு ஏற்பட்டது.

இதன்பேரில் சீட்டு கம்பெனி நடத்திய முரளி மற்றும் சீதாவை சந்தித்து பணத்தை கேட்டிருக்கிறார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தோஷை கோடாரியால் வெட்டிக் கொன்ற அவர்கள் சாக்கு மூட்டையில் கட்டி வீசிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்களை சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் தேடிப் பிடித்து தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். 

இதனிடையே முரளி மற்றும் சீதா நெருக்கமாக இருந்த போது வீடியோ எடுத்த சந்தோஷ் அதை வைத்து மிரட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளான். ஒரு கட்டத்தில் சீதாவை தனது இச்சைக்கு பயன்படுத்த முயற்சித்ததே இந்த கொடூர கொலைக்கு காரணம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.