கணவனுடன் சண்டை போட்டால் மனைவிக்கு ஆயுள் கூடுமாம்! ஆண்களை மிரள வைக்கும் கண்டுபிடிப்பு!

அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் தம்பதிகள் நீண்ட நாள் வாழ்வதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.


காதல் இணையுடன் சண்டையிட்டுக் கொள்ளும் பலர் அதன் பிறகு பலமணிநேரமோ நாட்கணக்கிலோ குற்ற உணர்வை அனுபவிப்பது வழக்கம். ஆனால் நாம் சற்றும் அறியாத வகையில் சண்டைகள் இணைகளின் வாழ்நாளை அதிகரிப்பது பயோபிஹேவியரல் ஜர்னல் என்ற இதழில் வெளியிடப்பட்ட் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

ஒருவரின் பழக்க வழக்கங்கள் அவரது இணையின் ஆயுளில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இலக்காகக் கொண்டு 32 ஆண்டுகளில் 192 ஜோடிகளிடம் ஆய்வு மேற்கொள்ளபட்டது. ஒவ்வொருவரிடமும் அவர்கள் தங்கள் இணையுடனான சண்டையின் போது உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

பொங்கி வெடிப்பார்களா? தங்களை தனிமைப்படுத்திக் கொள்வாரகளா? சூழ்நிலைக்கு அதிக அழுத்தம் கொடுப்பார்களா? அல்லது தனது மனதில் உள்ளதை வெளிப்படுத்த முயல்வார்களா? என்பது போன்று பல்வ்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. 

அப்போது ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் தம்பதிகள், மற்ற அணுகுமுறைகளை  கடைபிடிப்பவர்களை விட நீண்ட நாள் வாழ்வதாக ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர். ஒருவர் தனது கோபத்தைக் கொட்டித் தீர்க்கும் போது மற்றவரும் அதே அணுகுமுறையையே பின்பற்றுவார். இதனால் இருவரது உணர்வு அழுத்தங்களுக்கும் வடிகால் ஏற்பட்டு இருவரும் நீண்ட நாள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஊடலுக்குப் பின் கூடல் என்பது போல இருவரும் கோபத்துடன்  சண்டையிட்டுக்கொள்ளும்போது அவர்களின் உணர்வு வெளிப்பாடுகளுடன் மனதில் உள்ள எண்ணங்களும் கொட்டப்படுவதால் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு நல்ல தீர்வையும் அதன் மூலம் ஏற்படும் மகிழ்ச்சியில் உடல் ஆரோக்கியத்தையும் எட்ட முடிகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். 

எனினும் பொங்கி வெடிப்பதை விட இருவரும் ஒருவருக்கு ஒருவரு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது நலம் பயக்கும் என்று கூறும் ஆய்வாளர்கள் மவுனமாக இருப்பது தீர்வுக்கோ உடல் ஆரோக்கியத்துக்கோ உகந்தது அல்ல என்கின்றனர்.