குஷி பட பாணியில் ஒரே ஹாஸ்பிடலில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் கணவன் மனைவியாகும் அதிசயம்!

ஒரே மருத்துவமனையில் ஒரே நேரத்தில் பிறந்த குழந்தைகள் தற்போது தம்பதியாக உள்ளனர்.


1992ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி. அன்று கிரேட் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரு குழந்தைகள் பிறந்தன. ஒரே நேரத்தில் பிறந்த குழந்தைகளில் ஒன்று ஆண் ஒன்று பெண். ஆண் குழந்தையின் பெயர் டாம், பெண் குழந்தையின் பெயர் சவுனா கிரேசி. அந்த இருவரும் 2010ஆம் ஆண்டில் தங்களது பதினெட்டாவது பிறந்தநாள் அன்று சந்தித்துக்கொண்டனர். அப்போது தாங்கள் இருவரும் ஒரே மருத்துவமனையில் ஒரே நேரத்தில் பிறந்ததை எண்ணி பூரிப்படைந்தனர். இதுவே அவர்களது காதலுக்கு அடித்தளமிட்டது.

நாட்கள் செல்ல செல்ல இருவரும் காதலிக்க தொடங்கினர். டாம் முதலில் தனது காதலை வெளிப்படுத்தி யுள்ளார். ஆனால் வழக்கமான பெண்களைப் போலவே வெறும் நட்பு மட்டுமே எனக்கூறி  கிரேசி தட்டிக் கழித்துள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து டாம் உடன் இரவில் வெளியே சென்ற கிரேசி தனது காதலை உணர்ந்து கொண்டார்.

அப்போது படக்கென்று டாம் இடம் தனது காதலை அவர் வெளிப்படுத்தினார். தனது காதலர் கோடியில் ஒருவர் என்று சவுண்ட் கிரேசி தெரிவித்துள்ளார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பது மூத்தோர் வாக்கு. ஆனால் இங்கு ஒரு திருமணம் மருத்துவமனையிலேயே நிச்சயிக்கப்பட்டு விட்டது.