கொரோனாவின் 2வது சுற்று தாக்குதல் பயங்கரமாக இருக்கும்..! நோவார்டிஸ் சிஇஓ வெளியிட்ட திடுக் தகவல்!

சென்னை: ''இனிதான் பயங்கரமான வகையில் கொரோனா வைரஸ் தாக்குதல் நிகழப்போகிறது,'' என்று, பிரபல மருந்து நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.


நோவார்டிஸ் நிறுவனம் மருந்துப் பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த வசந்த் நரசிம்மன் உள்ளார். அவர், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆபத்தான வகையில் பரவி வரும் சூழலில், இதுபற்றி தனது கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.  

அதில், ''கொரோனா வைரஸின் முதல்கட்ட அலை (பரவல்) விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இது சற்று ஆபத்துக் குறைவானதாகவே இருந்தாலும், கொரோனா வைரஸின் 2ம் கட்ட அலை அடுத்த சில மாதங்களில் தொடங்க உள்ளது. அப்போதுதான், இந்த உலகம் மிகப்பெரும் ஆபத்தை எதிர்கொள்ளப் போகிறது.  

அதன் தாக்குதல் வீரியம் மிகப் பயங்கரமாக இருக்கும். தற்போதைய சூழலில், மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து, கொரோனா வைரசை கட்டுப்படுத்த உதவும் என மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதன்பேரில் மருந்துகளை தயாரிக்கும் பணியில் நோவார்டிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது,'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  

ஏற்கனவே கொரோனாவுக்கு பயந்து மக்கள் பீதியில் உள்ள நிலையில், ஒரு மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரி கூறியுள்ள இந்த தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது...