கொரோனா ஜோக்ஸ்... வாய்விட்டு சிரிங்க ப்ளீஸ்

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லிவைத்தவர் நம் தமிழ் பாட்டன். அந்த வகையில் கொரோனா வைரஸ் கிருமி அச்சுறுத்தும் நேரத்திலும், நகைச்சுவையால் நம்மை சிரிக்க வைக்கிறார்கள் இணையவாசிகள்.


1. சைனா தயாரிச்சதிலேயே, இந்த கொரனா மட்டும் தான் ரொம்ப தரமானதா இருக்குப்பா!

-ஆர்.ஜே.பத்மா

2) இதுக்கு ஏம்மா கொரானா அல்வான்னு பேர் வைச்சிருக்க....?

சாப்ட்டு பத்து நாளைக்கு பிறகு தான் எஃபக்ட் தெரியும்

- _ தனுஜா ஜெயராமன்

3) கொரோனா அறிகுறி தெரிய 7 நாட்கள் ஆகும்மா...

அதுவரை...நீங்க மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்தணும்!

அதுங்க சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் ?

-_ அப்துல் ரஹ்மான்

4) முன்னாடிலாம்..பஸ்ல இரும்முனா பாவம்னு சீட் கிடைக்கும்.. இப்பலாம்‌ பஸ்சே கிடைக்குது...‌.

-_ விஜயகுமார் புவனேந்திரன்

5) ஓரே ஒரு வைரஸூக்கு ஓராயிரம் வாட்ஸ் அப் வைத்தியர்கள்!

_ -சுந்தர்ராஜ் வைத்திலிங்கம்

6) இப்போ மாஸ்க் போட்டுட்டு சுத்திட்டு இருக்க பாதி பயலுக யாருன்னு நினைச்சே...

கடன் கொடுத்தவங்கிட்ட இருந்து தப்பிக்க மாஸ்க் போட்டுக்கிட்டு, கொரோனாவுக்காகன்னு பொய் சொல்லிகிட்டு திரியுற பயலுகதான்!

-_ கணேஷ்குமார்

7)கடன்காரன் டொக் டொக்குனு கதவ தட்டிக்கிட்டே இருக்கான்..... நீ லொக் லொக்குனு இரும்மிகிட்டு போய் கதவைத் திற. அவன் உடனே போயிடுவான்.

-_ மாயா குமாரன்

8) இங்கு குறைவான விலையில் கொரானா சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்படும். இப்படிக்கு, டிரெண்டி சாமியார்.

-_ பாலகுமார்

9) கொரானாவுக்கு 'மாஸ்க்' வாங்குனா 'விணீபீமீ வீஸீ சிலீவீஸீணீ'னு போட்டிருக்கே... வாங்கலாமா, வேணாமா?

-ரமேஷ்பாபு முத்துகிருஷ்ணன்

10) இந்தாலே! கொரானா முடிஞ்சா சித்திரைல வா!

காயிற வெய்யிலுக்கு நாங்களே செத்துருவம்! நீ எம்மாத்திரம்?

-_ செல்வி சிவஞானம்

11) சனி புடிச்சா ஏழரை... கொரோனா புடிச்சா கல்லறை...

-_ பாலமுருகன் வரதராஜன்

12) விளம்பரம்: சென்னைக்கு மிக அருகில், கொரோனா வரமுடியாத தூரத்தில் அழகிய வீட்டு மனைகள்!

-_ குறிஞ்சி செல்வன்

13) இருமல் இருந்தால் எண் ஒன்றை அழுத்தவும், சளி, தும்மலுக்கு எண் இரண்டை அழுத்தவும். இரண்டும் இல்லையென்றால் எங்கேயாவது ஒழிந்து தொலையவும்!

-_ சுதாகர் பாலாஜி

14) ஆக மொத்தம்.. கொரோனா வைரஸ் கிட்டேந்து தப்பிக்கணும்னா... அவாள்.. இவாள்.. ன்னு நக்கலடிச்ச பிராமணர்கள் மாதிரி.. அடிக்கடி கைகால்களை அலம்பிண்டு, தண்ணியை உதட்டுல படாமல் குடிச்சிண்டு, கண்டபடி கண்டவாளைத் தொடாம.. யார் மேலேயும் பட்டு ஈஷிக்காம மடி ஆசாரமா இருக்கணும்..!

-_ ஜெயந்தி ஜெயந்தி

15) உலகைத் திரும்பி பாக்க வச்சது டயானா. இருமிப் பாக்க வச்சது கொரோனா!

_ விஸ்வநாதன்

16) சட்டுபுட்டுனு வரன் பார்த்து கல்யாணத்த முடிச்சிடலாம்!. இப்பன்னா, கூட்டம் வராது பாருங்க.

-_ மூர்த்தி அதியணன்