மார்ச் 7 ம் தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று மத்திய அரசின் சார்பில் தொலைபேசி அழைப்புகளின் ரிங்டோன் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டு வருவதை எண்ணி குழம்பிப் போய் உள்ளனர் செல்போன் அழைப்பார்கள்.
செல்போன் அழைப்புகளில் கொரானா காய்ச்சல் காலர் ட்யூன்..! ஜியோ வாடிக்கையாளர்களை பீதிக்கு உள்ளாக்கிய குரல்!

சீனாவின் வூஹான் எனும் இடத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ். படிப்படியாக உலகம் முழுவதும் பரவியுள்ளது. சுமார் 87 நாடுகள் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன. இந்த தாக்குதல் காரணமாக சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும். உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
இந்நிலையில் இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்படுள்ளதாக வந்துள்ள செய்தியால். மத்திய மற்றும் மாநில அரசுகள். இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக மொபைல் போன் அழைப்புகளில் வரும் ரிங்டோனுக்கு பதிலாக. அந்தந்த பிராந்திய மொழிகளில் கொரோனா பற்றிய அறிவிப்புகளும் கேட்கிறது.
அதன்படி. அடிக்கடி கை கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும். இதுபற்றி மேலும் சந்தேகம் இருந்தால். அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுகும் படி கூறுகிறது அந்த காலர் டியூன்.
முதற்கட்டமாக ஜியோ நெட்வொர்க்கில் உள்ள அனைத்து அழைப்புகளுக்கும் இந்த விழிப்புணர்வு செய்திகள் கொண்ட ரிங்டோன் விளம்பரங்கள் செய்யப்படுவதாகவும். இன்னமும் சில நாட்களில் அனைத்து தொலைபேசி நிறுவனங்கள் வாயிலாக. இது போன்ற விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்ய உள்ளதாக அறிய முடிகிறது.
தொலைபேசி சேவையில் மொபைல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு எண்ணற்ற பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இந்த காலத்தில். காலத்திற்கு ஏற்றவாறு அரசாங்கமும் தனது விளம்பர யுக்திகளை கையாள்வதை எண்ணி பாராட்டுகின்றனர் பொதுமக்கள்.
மேலும் அரசு விளம்பரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க இடைத்தரகர்களாக உள்ள பலர். அரசு பணத்தை கொள்ளை அடிப்பதிலேயே குறியாக செயல்படுவதால். அனைத்து மக்களிடமும் அரசின் செய்திகள் போய்ச் சேருவதில்லை என்பது பெரும்பாலோரின் குற்றச்சாட்டு.
இந்நிலையில் முதல் முறையாக தொலைபேசி அழைப்புகளுக்கு வரும் ரிங்டோனுக்கு பதிலாக அரசாங்கத்தின் விழிப்புணர்வு விளம்பரங்கள் வருவதை அறிந்த சிலர். வியப்படைவதும். சிலர் பாராட்டுவதும். இன்னும் சிலர் எனக்கு பிடித்தமான பாடல் வரவில்லையே என்று முனுமுனுத்தபடி செல்வதைக் காண முடிகிறது.
இதேபோல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை தொலைபேசி மணி வாயிலாக வழங்கினால். எதிர்காலத்தில் மக்களின் நம்பிக்கையை பெற இது சரியான வாய்ப்பாக இருக்கும். இந்நிலையில் காலையில் இருந்தே ஜியோ வாடிக்கையாள் கொரோனா வைரஸ் ரிங்டோன் பற்றிய விவாதங்களில் ஈடுபட்டு வருவது சுவாரஸ்யமாக இருக்கிறது.
மணியன் கலியமூர்த்தி