சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என்றும் அதனால்தான் பள்ளிக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ்அப் தளத்தில் தகவல் ஒன்று வலம் வருகிறது. மேலும், தொலைக்காட்சியில் முக்கிய செய்தி என்ற தலைப்புடன் இந்த தகவல் வைரலாகி வருகிறது.
சென்னையில் பள்ளி மாணவனுக்கு கொரோனா? வைரல் செய்தியின் உண்மை பின்னணி!
முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா பாதிப்பு என்றும் அதனால் அந்த பள்ளிக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ்அப் தளத்தில் தகவல் ஒன்று வலம் வருகிறது. மேலும், இதில் குறிப்பாக தொலைக்காட்சியில் முக்கிய செய்தி என்ற தலைப்புடன் தகவல் வைரலாகி வருகிறது.
தந்தி டி.வி.யின் முக்கிய செய்தியில் பிரிவில் தகவல் வெளியான புகைப்படத்தில் ‘முகப்பேர் பகுதியில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால் அப்பள்ளி மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது’ என எழுதப்பட்டுள்ளது.
இதன் உண்மை தன்மையை ஆராயும் போது அது மென்பொருள் மூலம் மாற்றப்பட்டு இருப்பது என்பது தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமின்றி தந்தி டி.வி. முக்கிய செய்தி படத்தில் மாணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களில் கொரோனா பாதிப்பு தகவல் தவிர, இதர எழுத்துக்களில் வேறுபாடு இருப்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக புகைப்படத்தில் உள்ள குறியீடு 1 மற்றும் 2 எழுத்துக்களில் வித்தியாசம் இருப்பதை தெளிவாக காணப்படுகின்றது.
கொரோனா வைரஸ்ஸால் பல வதந்திகள் உலா வரும் சூழ்நிலையில், இது போன்ற வதந்திகள் மக்களை மிகவும் அச்சுறுத்தியுள்ளது. அதனால் மக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு சார்ப்பில் பல அறிக்கைகளை தாக்கல் செய்கின்றது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.