தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி… முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

கொரோனா தொற்றுக்கு அதிவிரைவில் தடுப்பூசி மற்றும் மருந்துகள் இந்தியாவில் கிடைக்க உள்ளன. இந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அவசர சிகிச்சைகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவது குறித்தான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும்போது விரைவாகவும் திறம்படவும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிப்பது தொடர்பாக செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார். முதல் நாள் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.