தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்… எதிர்க் கட்சிகளை அலற வைத்த எடப்பாடி பழனிசாமி

பீகார் தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என்று நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கும் நிலையில், தேர்தலை கணக்கிலே எடுக்காமல், தமிழகம் முழுவதும் ’கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக நடத்தி கொரோனா நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தார். கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்கான கருவிகள், உபகரணங்கள் மின்னல் வேகத்தில் கொள்முதல் செய்யப்பட்டன. அதுபோலவே சிகிட்சைக்காக போதுமான அளவு மருந்துகளும் வாங்கப்பட்டன.

இது தவிர, கொரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி அடிக்கடி ஆலோசனை நடத்தி பொது முடக்கத்தில் ஒவ்வொரு கட்டமாக தளர்வுகளை அறிவித்தார்.

இதெல்லாம் போக, கொரொனா நிவாரணப் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை அறிய தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அவர் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல்வரின் இந்த ஓய்வறியா உழைப்பால் தமிழகத்தில் இப்போது கொரோனா பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது. நாள் ஒன்றிற்கு 6 ஆயிரம் வரை இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3 ஆயிரமாகக் குறைந்திருக்கிறது.

இது பற்றி நம்மிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி, ‘’ கொரோனா தடுப்பிற்கு உடனடியாக நிதி ஒதுக்குவதிலாகட்டும், நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதிலாகட்டும் எல்லாவற்றிலுமே எடப்பாடி போர்க்கால வேகத்தில் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே கொரோனா தற்போது கட்டுக்குள் வந்திருக்கிறது. இந்தநிலையில் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்கிற அவரது அறிவிப்பின் மூலம் தமிழகத்திலிருந்து கொரோனா முற்று முழுதாக துடைத்தெறியப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தனது ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் தமிழக வரலாற்றில் எடப்பாடி அழியாத இடத்தை பெற்றுவிட்டார்’’ என்றார்.