கொரோனா தடுப்பூசி சென்னைக்கும் வந்தாச்சு…! எடப்பாடி பழனிசாமி பரிசோதனை மேற்கொள்ள திடீர் உத்தரவு!

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் குறைந்துவருகிறது. ஆனாலும், கொரோனா தொற்றுக்கு மருந்தும், தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படுவது தான் நிரந்தரத் தீர்வு.


இப்போது ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக கூறியுள்ளது. அதேபோன்று பிரிட்டனும் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதை உறுதி செய்துள்ளது. ஆம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. 

இந்த தடுப்பூசிகளை பரிசோதனை செய்து உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் இறங்கியுள்ளன. இந்த நிலையில், சென்னையிலும் இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சென்னையில் 300 பேரிடம் கோவிஷீல்டு செலுத்தி முதல் கட்டமாக பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பரிசோதனை வெற்றி அடைந்தால், கொரோனாவுக்கு மக்கள் அச்சப்பட அவசியமே இல்லை.