இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா..! 57 வயது பெண்மணி மரணம்! தமிழகத்தை மிரட்டும் கொரோனா!

தமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது.


சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இதுவரை 5016 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இன்று மட்டும் 50 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது.

திருச்சியில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்ட இரண்டு பேர் இன்று சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். 57 வயது பெண் இன்று உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொடர்பான ஹெல்ப்லைன் எண்ணுக்கு இதுவரை சுமார் 37ஆயிரம் பேர் தொடர்பு கொண்டுள்ளனர். கொரோனா பாதித்தவர்களை தனிமையில் வைத்தால் போதும். அவர்களை முற்றிலும் ஒதுக்கக்கூடாது. இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.