காற்றில் மிதக்கும் கொரோனா வைரஸ்..! பேசும் போது, சுவாசிக்கும் போதும் பரவும் பகீர் ஆய்வு முடிவு!

கொரனா வைரஸ் கிருமிகள் காற்றிலும் மிதக்கும் தன்மை உடையன என்ற அதிர்ச்சித் தகவலை அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


கொரனா தொடர்பாக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் அந்நாட்டு அதிபர் டிரம்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், முதன் முதலாக கொரனா எப்படி பரவுகிறது என்று ஆய்வு செய்தபோது, சளி துளி, எச்சில் மூலம் பரவும் என கண்டறிந்தோம். ஆனால் கொரனா பாதித்தவருடன் பேசினாலும், அவருடைய காற்றை மற்றவர்கள் சுவாசித்தாலும் எளிதில் கொரனா பரவும் அபாயம் உள்ளது. முதலில் கொரனா பாதித்தவர் தும்பினாலோ இரும்பினாலோ அதன் மூலம் எதிரில் உள்ளவரின் மூக்கில் கண்ணில் விழுந்தால் கொரனா பரவும் என கூறப்பட்டது.

அதனால்தான் குறைந்த பட்சம் ஒரு மீட்டர் இடைவெளி கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் கொரனா வைரஸ் கீழே விழுவது கிடையாது மாறாக காற்றிலேயே மிதக்கிறது என்று தெரிவித்துள்ளனர். மேலும் கொரனா பாதித்த பாதி பேருக்கு அறிகுறியே காட்டுவதில்லை. மலேரியாவை குணப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரனா குணப்படுத்த கொடுத்தால் நோயாளிகள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.

இதற்கிடையே நியூயார்க்கில் வனவிலங்கு பூங்கா ஒன்றில் புலிக்கு கொரனா தொற்று ஏற்பட்டது. இதனால் மற்ற விலங்குகளுக்கு கொரனா தொற்று உள்ளதாக என ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதாவது விலங்குகள் பூங்காவில் இருக்கும் ஊழியருக்கு கொரனா தொற்று இருந்துள்ளது. அந்த தொற்று விலங்குகளுக்கும் பரவி உள்ளது. இதுநாள் வரை கொரனா மனிதர்களை மட்டுமே பாதிக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் விலங்குகளுக்கும் பரவத் தொடங்கி உள்ளது.