காதலுக்கு கண் இல்லை என்பதை தாண்டி காலம் கூட இல்லை என்பது போல் ஆயிற்று இப்போதிய நிலமை. காரணம் ட்ரீட்மென்ட்டுக்கு வந்த இரண்டு இளம் ஜோடிகள் கொரோனா வார்டிலேயே லவ் வந்துவிட்டது. இதனை கண்ட மருத்துவர்கள் அனைவரும் கூறுவது போல் இந்த ரணகளத்திலும் இந்த கிளுகிளுப்பு தேவையா என்று ஆச்சரியமாக பார்கின்றார்கள்.
சென்னை மருத்துவமனை புதருக்குள் ஒதுங்கிய ஆண் -பெண் கொரோனா நோயாளிகள்! எட்டிப் பார்த்தவர்களையே கிளுகிளுப்பாக்கிய சம்பவம்!
கொரோனாவின் கோரதாண்டவம் உலக அளவில் அதிகமாகி கொண்டு இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவிலும் அதிக அளவில் பரவ தொடங்கி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிலேயே சென்னையில்தான் கொரோனா தாக்கம் அதிகமாக இருகின்றது. தினந்தோறும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் டாப் லிஸ்ட்டில் தலைநகரம்தான் என்று கூட கூறலாம்.
இப்படி தினம் தினம் மருத்துவமனையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், இரண்டு இளம் ஜோடிகளும் மருத்துவமனையில் வைரஸ் பாதித்துள்ள நிலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையில், இருவருக்கு இடையில், திடீரென காதல் வந்துவிட்டது. ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் 2 பேரும் பழகி உள்ளனர். சிகிச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே காதலும் ஒரு பக்கம் நன்றாக வளர்ந்து கொண்டிருந்தது.
இப்படி ஒரு புறம் இவர்களின் காதல் போயி கொண்டு இருக்க, சிறிது நாட்களில் இந்த காதல் விவகாரம் அங்கிருந்த டாக்டர்கள், நர்சுகளுக்கும் கூட தெரிந்திருக்கிறது. இதை கவனித்தும், கண்டுகொள்ளாமல் அவர்கள் இருந்துள்ளனர். நாள்யிடையில், சிகிச்சையில் இருந்த 2 பேரையும் ஒருநாள் திடீரென காணவில்லை. அதனால் இந்த ஜோடியை மருத்துவமனை வளாகம் முழுக்க ஊழியர்கள் தேடி வந்தனர்.
இருவரும் வளாகத்தில் ஒரு மறைவிடத்தில் இரு புதர் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதை கண்ட மருத்துவர்கள் கோபம் அடைந்து இருவரையும் திட்டி உள்ளனர். உயிரை பணயம் வைத்து உயிர்களை காப்பாற்றி கொண்டிருந்தால், இப்படி அஜாக்கிரதையாக இருக்கிறார்களே என்று பல கேள்விகளும் கேட்டு உள்ளனர்.
மேலும், மருத்துவர்கள் இருவருக்கும் சிகிச்சை முடியும் வரை இப்படியெல்லாம் நடந்துக்க கூடாது என்றும், வார்டினை விட்டு எங்கேயும் போகக்கூடாது என்றும் அட்வைஸ் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ரணகளத்திலும் இந்த கிளுகிளுப்பு தேவையா என்று ஆச்சரியமாக பார்கின்றார்கள்.