மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, ஆய்வுக்குத் தயாராகும் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதத்தை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மற்ற நாடு மற்றும் மாநிலங்களில் கொரோனா அதிகரித்துக்கொண்டே வருகிறது.


இந்த சூழலில், கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாகவும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 13-ம் தேதி முதல் 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 

அதன்படி 13ம் தேதி முதலாவதாக தூத்துக்குடி மாவட்டத்திற்கும், 14ம் தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கும் முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார். கொரோனா தொற்று அதிகரித்துவிடாமல் பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் முதல்வருக்கு பாராட்டு அதிகரித்து வருகிறது.