ஐஸ்வர்யா ராய் குடும்பத்திற்கே கொரோனா..? இந்தியாவுக்கே பாடம் நடத்திய அமிதாப்பச்சனுக்கே இந்த கதியா

கொரோனாவால் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பாதிக்கப்பட்டிருக்கும் விவகாரம் இன்று இந்தியா முழுக்க பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.


ஏனென்றால், கொரோனாவில் இருந்து எப்படி தப்புவது என்று இந்தியாவுக்கே பாடம் நடத்தினார் அமிதாப்பச்சன். இதனை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியாமல், அவர்கள் மீது ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு பதிவுகள் நாடெங்கும் உலா வருகிறது. இந்த நிலையில், மனநல மருத்துவர் டாக்டர் ருத்ரன் இதுகுறித்து பதிவு ஒன்று போட்டுள்ளார்.

குழந்தை, அம்மா, அப்பா, தாத்தா என்று பச்சன் குடும்பமே கொரோனாவில் பாதிக்கப்பட்டது பற்றி, ‘கைதட்டினாயே விளக்கு ஏற்றினாயே’ என்றெல்லாம் நக்கலாகக் குத்திக் காட்டும் பதிவுகள் சரியல்ல. அன்று அவ்வாறு செய்தது சுயமான மடத்தனமா அல்லது தலைவன் சொல் தட்ட முடியாத நிர்ப்பந்தமா என்பது வேறு விஷயம்.

ஏன் ஹோமியோவை ஆதரித்து எழுதிவிட்டு இப்போது அறிவியல் மருத்துவம் நாடுகிறார்கள் என்பதும் அதே போன்ற ஒரு விஷயம்தான். - 500 பேர் குணம், அனுமதிக்கக் கூட இடம் இல்லை என்று விளம்பரப்படுத்தப் படும் ஆயுஷ் சார்ந்த பதிவுகளில் சொல்லாமல் மறைக்கும் அல்லது தெரியாமல் இருக்கும் விஷயம்- 

தொற்று இருப்பதைக் கண்டுபிடித்து விட்ட பின், தீவிர அறிகுறிகள் இல்லாவிட்டால், உங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் கூட ஐந்து நாட்கள் பத்திரமாய் வைத்து விட்டு அனுப்பி விடலாம். சிலருக்குத் தொற்றினால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளுக்கு வெட்டிப்பேச்சும் வீம்பும் உதவாது. தானாய்ச் சரியாவதைத் தானே சரியாக்கியதாய்க் காட்டுவது அறிவியல் அல்ல, அற்ப விளம்பரம் அல்லது அடிமுட்டாள்தனம்.

இனியாவது எல்லாரும் எச்சரிக்கையோடு முகக்கவசம், இடைவெளி, சுயசுகாதாரம் ஆகியவற்றில் அசட்டை காட்டாமல் இருந்தால் பரவல் கட்டுக்குள் வரும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.