பணக்காரர்களை தாக்கும் கொரோனா! உண்மையில் பெரும்புள்ளிகளையும் பதம் பார்க்கிறதா! கொரோனாவினால் திணறும் தி.மு.க எம்.எல்.ஏகள்

கொரோனா என்பது பணக்காரர்களின் நோய், ஏழைகளுக்கெல்லாம் வரவே வராது என்று முன்பு ஒரு காலத்தில் டாக்டர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். அவர் சொன்னதைக் கேட்டு, இப்போது பெரும்புள்ளிகளையும் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது கொரோனா.


தி.மு.க.வின் அன்பழகன் கொரோனாவுக்குப் பலியாகிவிட்ட நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரும் அமைச்சர் கே.பி.அன்பழகனும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நான் காய்ச்சலுக்காக மருத்துவமனைக்குப் போனேன். இப்போது தனிமையில் இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கே.பி.அன்பழகன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே நேரம் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நிலைமை கவலைப்படும் அளவுக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

கடந்த 17ம் தேதி காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனை காரணமாக, ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சத்யேந்திரர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அவருக்குநுரையீரல் தொற்று அதிகமான நிலையில், நிமோனியா பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மருத்துவமனை முன்வந்துள்ள நிலையில், டெல்லி மக்களுக்கும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.