வெள்ளை சட்டை! காவித்துண்டு! பெண் போலீஸ்களின் புது கெட்டப்பால் சர்ச்சை!

கான்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கின் பேரணியில் காவித் துண்டு அணிந்துகொண்டு பெண் போலீசார் கலந்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். அவரது வெற்றிக்காக சாமியார் கம்ப்யூட்டர் பாபா சிறப்பு யாகங்களைச் செய்தார். திக் விஜய் சிங்கின் பிரச்சாராப் பேரணியில் கம்ப்யூட்டர் பாபா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இந்தப் பேரணிக்கு பாதுகாப்புப் பணிக்கு வந்த பெண் போலீசார், வழக்கமான சீருடைக்குப் பதில் வெண்மை நிற ஆடையும் அதற்கு மேல் காவித் துண்டும் அணிந்திருந்தனர். தாங்கள் அவ்வாறு அணிந்து வர கேட்டுக்கொள்ளப்பட்டதாக ஒரு பெண் காவல் அதிகாரி தெரிவித்தார். 

ஆனால் இதை மறுத்துள்ள திக் விஜய் சிங் காவலர்களையோ, தொண்டர்களையோ தாங்கள் இந்த நிறந்த்தில் தான் ஆடை அணிய வேண்டும் என நிர்ப்பந்திக்கவில்லை என்றும் அவரவர் விருப்பத்துக்கே அவர்கள் ஆடை அணிந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.