மின்சார கட்டண அட்டையில் கிறிஸ்தவ மத பிரசார வாசகம் அச்சிடப்பட்டிருந்த விசயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் மின் கட்டண அட்டையில் கிறிஸ்தவ மதப் பிரசாரம்! கொந்தளிக்கும் இந்துக்கள்!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் இயங்கிவரும் மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு உள்பட்ட பகுதியில், நுகர்வோருக்கு வழங்கப்பட்ட மின்சார கட்டண அட்டையில் கிறிஸ்தவ மதப் பிரசாரம் இடம்பெற்றிருந்ததால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அரசுத்துறையை சேர்ந்த மின்சார வாரியம் இத்தகைய செயலை செய்யலாமா, என பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
அத்துடன், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை இந்து முன்னணியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, கிறிஸ்தவ அமைப்பு ஒன்று, பள்ளிகொண்டா மின்வாரிய அலுவலகத்திற்கு தேவையான அட்டைகளை இலவசமாக அச்சடித்து விநியோகித்ததாகவும், இதனால், பிரசங்க வார்த்தைகள் வருவதை தவிர்க்க இயலவில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு காரணமான ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அவர்கள் உறுதி அளித்தனர்.
அதிகாரிகளின் உறுதிமொழியை தொடர்ந்து, இந்து முன்னணியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். அரசுத்துறையில் இயங்கும் மின்வாரியம் மின்சார கட்டண அட்டை அச்சடிக்க, ஸ்பான்சர் கோரியதில் ஏதோ மர்மம் உள்ளதென்று, இந்து முன்னணியினர் கேள்வி எழுப்புகின்றனர்.