கட்டிட ஒப்பந்ததாரரிடம் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த தொழிலாளியை மதுபானத்தில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் வேலூர் மாவட்டடத்தில் அரங்கேறி உள்ளது.
கான்ட்ராக்டர் மனைவியுடன் தகாத உறவு! கட்டிட தொழிலாளி குடித்த பீரில் விஷம்! வேலூரை அதிர வைத்த கொலை! பரபரப்பு பின்னணி!

வாணியம்பாடியில் கட்டிட ஒப்பந்ததாரராக இருப்பவர் கனகராஜ். இவரிடம் சத்யராஜ், விஜய்குமார், அஜித்குமார் கட்டிட வேலை பார்த்து வருகின்றனர். ஒப்பந்ததாரர் கனகராஜின் மனைவிக்கும் தொழிலாளி சத்யராஜுக்கும் தவறான உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை கேள்விபட்ட ஜனகராஜ் தன்னுடைய மனைவியை கண்டித்தது மட்டுமின்றி எப்படியாவது சத்யராஜை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தன்னிடம் வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சத்யராஜை கொலை செய்து விட மூன்று பேரும் முடிவெடுத்துள்ளனர்.
பின்னர் மதுபானம் அருந்தலாம் வா என சத்தியராஜை அழைத்து வந்து அவருக்கு பீரில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளனர். இதையடுத்து மயங்கி விழுந்த சத்யராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
பின்னர் பின்னர் அவரது உடலை குப்பம் அருகே இருக்கும் வனப்பகுதியில் வீசியிருக்கின்றனர். ஒரு வாரம் கடந்த நிலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் வனப்பகுதியில் இருந்தை கண்ட போலீசார் அது கட்டிடத் தொழிலாளி சத்யராஜ் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில் அனைத்து விவரங்களும் தெரியவர, ஒப்பந்ததாரர் கனகராஜ் அவரிடம் வேலை பார்த்த விஜயகுமார், அஜித்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்