அதிவேகம்! திடீர் பிரேக் கட்! எதிரே பாய்ந்த லாரி! சின்னா பின்னமான வேன், ஆட்டோ, பைக்! 12 பேர் துடிதுடித்து பலி!

தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கன்டைனர் லாரி எதிரே வந்த வாகனங்கள் மீது மோதியதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


ஆந்திர மாநிலத்திற்குள் வரும் திருப்பதி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சித்தூர் அருகே தண்ணீர் கேன் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரி, ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.  

வேகம் அதிகமாக அதிகமாக இன்னும் கட்டுப்பாட்டை இழந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு எதிரே வந்த பஸ், வேன், பைக் போன்ற வாகனங்கள் மீது மோதியது. இதனால் பெண்கள் உட்பட சம்பவ இடத்திலேயே 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரும் படுகாயமடைந்துள்ளனர்.  

இச்சம்பவம் குறித்து அறிந்த நெடுஞ்சாலை துறை போலீசார், விரைந்து தீயணைப்பு படையினருடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  

படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  

இந்த கோர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.