இந்தியாவுக்கும் வந்தாச்சு கன்டெய்னர் வீடுகள்..! டிரை பண்ணுங்க பாஸ்...

வீடுகளாக உருமாறுகின்றன கண்டெய்னர்கள்.


மனித சமுதாயத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு சக்கரம் என்பது வரலாற்று உண்மை. வேளாண்மையைக் கண்டுபிடித்த பிறகான காலத்தில் உருவான தொலைதூர வணிகம், தொழிற்சாலைகள், அதனைச் சார்ந்த குடியிருப்புகள் மற்றும் கட்டுமானங்கள் தான் மனித நாகரீகத்தின் முதல் படி. இன்று வானுயர்ந்த கட்டிடங்கள், நீண்ட நெடும் பாதைகள், கிராமங்கள், நகரங்கள் அதில் அமையப்பெற்ற மேம்பாலங்கள், பேருந்து, கப்பல், விமானம், மெட்ரோ போக்குவரத்து என்று மனிதனால் தன் வசதிக்காக உருவாக்கப்பட்ட தெருக்கள் அந்த தெருவில் வாழ்வதற்கு சொந்த வீடு என்பது போன்ற தனது தேவையை நவீன காலத்துக்கு ஏற்ப வடிவமைத்து வருகின்றனர் நவீன கால சமுதாயத்தினர்.

தனிமனிதர்களின் பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப நமது இருப்பிடத்தின் அமைப்பு பற்றிய எண்ணங்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. அமெரிக்காவில் ஒரு குடும்பத்தினர் சற்று வித்தியாசமாக கப்பல்களில் சரக்கு கையாள உபயோக படுத்தும் கண்டெய்னர் கொண்டு தங்கள் இல்லத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அமெரிக்க கலாச்சாரம் மெல்ல மெல்ல இந்தியாவின் பக்கம் திரும்பி வருகிறது. 

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்.! அப்போதுதான் வாழ்க்கையின் அருமை தெரியும் என்று தமிழில் பழமொழி உண்டு. தற்போதைய பொருளாதார சூழலில் சொந்த வீடு என்பதே கானல் நீர் போல மாறி வரும் வேளையில். கனவு இல்லம் என்பதை விட பட்ஜெட் இல்லம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

கடந்த 2007 ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது அங்குள்ள மக்கள் பரவலாக வருமான இழப்பினை சந்திக்க நேர்ந்தது. அந்நாட்டைச் சேர்ந்த மைக்கேல் பெர்டோமென் என்பவர் அமெரிக்க பொருளாதர சரிவின் நிலையிலையை கருத்தில் கொண்டு.மிகக்குறைந்த செலவில் சொந்த வீடு கட்டுவது பற்றிய ஆய்வுகள் செய்து அதற்கான முயற்சியில் இறங்க ஆரம்பித்து சாதனையை நிகழ்த்தினார்.

ஆம். சிமெண்ட், செங்கல்களை கொண்டு கட்டப்படும் வீடுகளுக்கு ஆகும் செலவுகளை விட குறைந்த செலவில் அதிக நாள் தாங்கக் கூடிய கண்டெய்னர் வீடுகளை உருவாக்கி பெரும் சாதனையை தக்கவைத்துக் கொண்டார்.இத்தகைய கன்டெய்னர் வீடுகளை mYpad (மைபேட்) என்று அழைக்கிறார்கள்

இதற்காக இவர் பயன்படுத்தியது வெறும் 6 கண்டெய்னர்கள் மட்டுமே. இந்திய ரூபாய் மதிப்பில் 5 லட்ச ரூபாய் செலவில் இவர் உருவாக்கிய அழகான வீடு அடுக்கு மாடியுடன் காட்சியளித்து பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் கண்டெய்னர் வீடு கலாச்சாரம் இந்தியாவிற்கு படையெத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் உண்டாகும் கட்டிடத்தின் மதிப்பு  குறைவு போன்ற காரணிகளை ஆராய்ந்து கண்டெய்னர் வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் சில நிறுவனங்கள்.

20 அடி நீளம் 8 அடி அகலம் மற்றும் 8.5 அடி உயரம் கொண்ட கண்டெய்னர்களின் சந்தை விலை இன்றைய மதிப்பில் 40,000ல் ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. ஜஸ்ட் டயல், ஓஎல்எக்ஸ், குயிக்கர் போன்ற இணையதளங்களின் மூலம் எளிதாகப் விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் சேலம், நாமக்கல், கோயம்பத்தூர் போன்ற நகரங்களில் இந்த நவீன வசதிகள் கொண்ட கண்டெய்னர் வீடுகளை கட்டமைக்க பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் முதல் கண்டெய்னர் வில்லாவை சென்னை இசிஆர்-ல் கட்டியுள்ளது ரெக்டாங்குளர் கன்ஸ்டரக்சன் நிறுவனம். மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்த கண்டெய்னர்  வீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளதை அறிந்து அதுபற்றிய விவரத்தை கேட்பதற்கு மக்கள் தினசரி இந்த இடத்திற்கு வருவதாக கூறுகின்றனர் இந்த பகுதி கண்டெய்னர் குடியிருப்புவாசிகள்.

அமெரிக்கா, வியட்நாம், சீனா வரிசையில் தற்போது இந்தியாவில் இந்த இரும்பு வீடு குடியிருப்பு கலாச்சாரம் வளர்ந்து வருகிறது.

Maniyan Kaliyamoorthy