நிர்வாணமாக சென்று இளம் பெண்ணை படுக்கைக்கு அழைத்த போலீஸ்! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்!

23 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.


ஹரிச்சந்திரா லஹானே (41 வயது) என்ற கான்ஸ்டபிள், நேரு நகரில் உள்ள போலீஸ் காலனியில் வசித்து வருகிறார். பான்ட் நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இவர், 23 வயது பெண் ஒருவரிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, கடந்த 11ம் தேதியன்று, இரவு 10 மணியளவில்,  தனது வீட்டு பால்கனியில் நின்றபடி, அந்த பெண், தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அங்கே வந்த ஹரிச்சந்திரா அப்பெண்ணிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதோடு, சில்மிஷம் செய்து, அவரை சீண்டியுள்ளார். ஒருகட்டத்தில், தனது உடைகளை அவிழ்த்துவிட்டு ,நிர்வாணமாக நின்றபடி,அந்த பெண்ணை செக்ஸ் உறவுக்கு வரும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். 

இதுபற்றி அப்பெண், தனது புகாரில் விரிவாகக் கூறியுள்ளதை தொடர்ந்து, நேரு நகர் போலீசார் வழக்குப் பதிந்து, ஹரிச்சந்திராவை கைது செய்தனர்.