இப்படியும் ஒரு கண்டுபிடிப்! ஆண் - பெண் சேர்ந்து தான் இந்த ஆணுறையை திறக்க முடியும்!

டெல்லி: புதியதாக ஒரு ஸ்பெஷல் ஆணுறை சந்தையில் அறிமுகமாகியுள்ளது.


இதன் ஸ்பெஷல் என்ன என்று கேட்கிறீர்களா? அதாவது, உடலுறவு செய்ய விரும்பும் 2 பேரும் சேர்ந்து, 4 கைகளால் அழுத்தினால் மட்டுமே, இந்த பாக்கெட்டை திறந்து, உள்ளே உள்ள ஆணுறை வெளிய வரும். கான்சென்ட் காண்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆணுறையை, துலிபன் அர்ஜென்டினா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

உலகிலேயே இப்படி ஸ்பெஷலான ஒரு காண்டம் தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். ''காதலர்கள் இரண்டு பேரும் முழு ஒத்துழைப்புடன் செய்யும் உடலுறவுதான், நிலைத்த இன்பம் தரக்கூடியதாக இருக்கும். இதன் அடிப்படையில், இந்த ஆணுறையை தயாரித்துள்ளோம். 2 பேரும், தங்களுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள உதவும் வகையில், இந்த ஆணுறை உதவும் என்று நம்புகிறோம்,'' என, துலிபன் அர்ஜென்டினாவின் விளம்பரதாரராக உள்ள தி நெக்ஸ் வெப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.