18 மணி நேர ஆப்பரேசன்..! துடியாய் துடித்த பெற்றோர்..! தனித்தனியாக பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த ரெட்டையர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்!

பெரு நாட்டில் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை சுமார் 18 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


பெரு நாட்டை சேர்ந்தவர்களான ஷியோமாரா மோரலஸ் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.இந்நிலையில் குழந்தைகள் இடுப்புக்கு கீழ் ஒன்றோடு ஒன்று ஒட்டி பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தைகள் பிறந்தவுடனேயே அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பிரிக்க மருத்துவர்கள் முயன்றுள்ளனர்.

அப்போது பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பிரிப்பது குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என எண்ணி பிரிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் தனது குழந்தைகள் இவ்வாறே இருந்து விடுவார்களோ என்ற கவலையில் அவரது தாய் இருந்துள்ளார். தனது இரு குழந்தைகளையும் பிரிக்கும் முயற்சியில் தான் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சான் போர்ஜாவில் உள்ள  நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் சில்ரன்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். எனது குழந்தைகளுக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 40 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் குழந்தைகளை பிரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து ஒருவழியாக குழந்தைகளை அறுவை சிகிச்சை செய்து பிரித்துவிட முடிவு செய்தனர்.

இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 18 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் குழந்தைகள் இருவரையும் மருத்துவர்கள் அவர்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் இரண்டாக பிரித்தனர்.இதையடுத்து குழந்தைகள் சுமார் மூன்று மாதம் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது குழந்தைகள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அவரது தாய் கூறியதாவது தனது குழந்தைகளை இவ்வாறு பார்ப்பேன் என்று ஒருபோதும் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இவர்கள் இருவரும் தற்போது தன்னிடம் நன்றாக விளையாடுகிறார்கள் எனவும் தனது குழந்தைகளுடன் முதல் கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாட உள்ளதாகவும் ஆனந்த கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். தற்போது குழந்தைகள் இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.