தி.மு.க. இல்லேன்னா கமல்ஹாசன்..? காங்கிரஸ் திடீர் வெடி

தமிழகம் வந்த ராகுல் காந்தி, தி.மு.க.வில் யாரையும் சந்திக்காமல் சென்றபோதே, கூட்டணியில் குழப்பம் இருப்பது உறுதியானது. இந்த நிலையில், இப்போது புதுவை விவகாரம் பெரிதாகியிருக்கிறது.


இனியும் தி.மு.க.வை நம்புவது சரிப்படாது என்ற நிலையில், தமிழக காங்கிரசும், மக்கள் நீதி மையம் கட்சியும் கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியும்' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

அவரது கருத்து, தி.மு.க.,வுக்கு விடப்பட்ட மிரட்டலா அல்லது கமலுடன் இணைந்து, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியா என்ற, கேள்வி எழுந்துள்ளது.புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையில், புது கூட்டணி அமைய உள்ளது. அம்மாநிலத்தில், கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் கட்சி கழற்றி விடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 'மக்கள் நீதி மையம் கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி பெற முடியும்' என, கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து, தி.மு.க.,வுக்கு விடப்பட்ட மிரட்டலாக கருதப்படுகிறது. மேலும், காங்கிரசை, தி.மு.க., கழற்றி விட்டால், கமலுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்குவோம் என்பதையும், தி.மு.க.,வுக்கு அவர் உணர்த்தியுள்ளார் என்கிறது, சத்தியமூர்த்தி பவன் வட்டாரம்.

எப்படியோ கூட்டணிக் குழப்பம் தி.மு.க.வில் கும்மியடிக்கிறது.