கல்யானம் ஆகல, குழந்தை இல்ல ஆனா 72 லட்சம் ரூபாய் கடன் இருக்காம்! ராகுல் காந்தியின் அதிர வைக்கும் சொத்து பட்டியல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனக்கு 72 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


அமேதியில் போட்டியிடும் ராகுல்காந்தி இரண்டாவது மக்களவைத் தொகுதியாக கேரள மாநிலம் வயநாட்டை தேர்வு செய்தார். இதற்கான வேட்புமனுவை அவர் வியாழக்கிழமை அன்று தனது சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் சேர்ந்து தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்கள் பற்றி ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அதில் தனக்கு கையிருப்பாக 40 ஆயிரம் ரூபாய் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அசையும் சொத்து 5 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையா சொத்து 7 கோடியே 93 லட்சம் ரூபாய். சுய சொத்தாக 8 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கையிருப்பாக 40,000 ரூபாயும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் 72 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

5 கோடியே 20 லட்சம் ரூபாய் பங்குச் சந்தையில் முதலீட்டில் உள்ளது. தனக்கு சொந்தமாக வாகனம் இல்லை என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ஐந்து கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.