கராத்தே பேசினால் தப்பு, அழகிரி பேசினா தப்பு இல்லையா? காங்கிரஸ் கலாட்டா!

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், இப்போது பிற கட்சிகளுக்கு காவடி தூக்கும் கட்சியாக்த்தான் இருந்துவருகிறது. திடீரென உள்ளாட்சித் தேர்தலுக்கு நேற்றைய தினம் கோபமாக ஓர் அறிக்கை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் அழகிரி.


தலைவர் அழகிரியும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி வெளியிட்ட கூட்டறிக்கையில், 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது. 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒன்று கூட வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்குப் புறம்பானது என்று கொதித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த அறிக்கையைக் கேட்டு தி.மு.க.வினர் பாய்ந்தே விட்டார்கள். இதுபோன்று அறிக்கை விடுவதாக இருந்தால், அடுத்த தேர்தலுக்கு கூட்டணி குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கொதித்தனர்.

இந்தத் தகவல் அறிந்து சிதம்பரம் உடனே அதிசயமாக ட்வீட் செய்தார். காங்கிரஸ் தன்னுடைய ஆதங்கத்தை மட்டுமே வெளியிட்டது. இதனை மிரட்டலாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று அழகிரியும் பவ்யமாக ஓர் அறிக்கை விட்டுள்ளார். அதாவது தலைமையிடம் எந்த பிரச்னையும் இல்லை, கீழ் மட்டத்தில்தான் சிக்கல் என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தைக் கண்டு காங்கிரஸார் கண் சிவக்கிறார்கள். இதே போன்றுதான் கராத்தே தியாகராஜன் ஒரு கருத்தை வைத்தார். உடனே கட்சியில் இருந்து வெளியே அனுப்பினார்கள், இப்போது அழகிரியும் ராமசாமியும் பேசியிருக்கிறார்கள். இவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று கேட்கிறார்கள்.

யாருப்பா சொல்றது?