பிரச்சாரத்தின் போது குஷ்புவின் பின்னழகில் சில்மிஷம்! காங்., தலைவருக்கு நேர்ந்த தரமான சம்பவம்!

குஷ்புவின் பின்பக்கத்தை சீண்டிய காங்கிரஸ் தலைவர்... அதற்குப் பிறகு நடந்தது


இந்தத் தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் ஒரு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் நடிகை குஷ்பு. ஆனால், அவரது தலைவர் இளங்கோவனுக்கு மட்டும் தேனியில் சீட் கொடுத்துவிட்டு, குஷ்புவுக்கு தலைமை கைவிரித்துவிட்டது.

அதனால் தேனி தவிர எங்கேயும் தேர்தல் பிரசாரம் செய்வதற்குப் போகமாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார். ஆனால், வீட்டிலேயே உட்கார்ந்து இருந்தாலும் அசிங்கமாகப் பேசுவார்கள் என்பதால் வேறு மாநிலத்திற்குப் போக ரெடி என்று சிக்னல் காட்டினார் குஷ்பு.

அதன்படி அவரை கர்நாடகாவுக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்யுமாறு தலைமை அனுப்பிவைத்தது. அதனை ஏற்று கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார் குஷ்பு. இந்த நிலையில் பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வான் அசாத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவந்தார் குஷ்பு.

அப்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு நல்ல பாதுகாப்பு இருக்கும், பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று வீராவேசமாக முழங்கியிருக்கிறார். அப்போதுதான் அவருக்குப் பின்னே நின்றுகொண்டிருந்த ஒரு காங்கிரஸ் பிரமுகர், குஷ்புவின் பின்பக்கம் கை வைத்து தடவியிருக்கிறார்.

பேசிக்கொண்டு இருந்ததால், சற்று விலகி நின்று மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார் குஷ்பு. அப்போதும் அதேபோன்று தடவல் தொடங்கியிருக்கிறது. சட்டென உடனே பேச்சை முடித்துக்கொண்டார் குஷ்பு. அடுத்தவரை பேசுவதற்கு அழைக்கப்பட்ட நேரத்தில் கோபத்துடன் பின்னே திரும்பிய குஷ்பு,  தடவல் பிரமுகருக்கு கன்னத்தில் சப் என்று அறை வைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போன்று கை காட்டிவிட்டு சென்றுவிட்டார்.

எனக்கு ரொம்பத் தெரிஞ்சவங்க... அதான் செல்லமா கன்னத்துல தட்டிட்டுப் போறாங்க என்று சமாளித்தாராம் அந்த பெங்களூரு பிரமுகர். காங்கிரஸ்ன்னா சும்மாவா...