ஹெச்.ராஜாவை செருப்பால் அடித்து விரட்டுங்க! ப.சிதம்பரம் ஆவேசம்!

பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று கூறிய ஹெச்.ராஜாவை வாக்காளர்கள் செருப்பால் அடித்து விரட்ட வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.


சிவகங்கையில் மகனை ஆதரித்து சிதம்பரம் பேசியதாவது! தந்தை பெரியாருக்கு செருப்பு மாலை போட வேண்டும் செருப்பால் அடிப்பேன் என்று சொன்னவர் இன்று வேட்பாளராக எங்களிடம் ஓட்டு கேட்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  இந்த அரசு கல்விக்கடன் தராது மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் மாணவர்களுக்கு கல்விக் கடன் கொடுக்கும் கல்விக் கடனுக்கு வேலை கிடைக்கும் வரை வட்டி கிடையாது

பிரமர் மோடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று குடுகுடுப்க்காரன் சொல்வது போல் சொன்னார் ஆனால் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. பணமதிப்பிழப்பு செய்வதற்கு பிரதமர் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட யாருக்கும் அதிகாரம் கிடையாது இந்த நிலையில் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்துள்ளார் பிரதமர் மோடி.

பாரதிய ஜனதா கட்சி வடநாட்டு மாநிலத்தில் உள்ளவர்களை தலைவர்களாகக் கொண்ட ஒரு கட்சி இந்தியை திணிக்க கூடிய ஒரு கட்சி சமஸ்கிருதத்தை திணிப்பதும் இந்தியைத் திணிப்பதும் ஒன்றுதான். திமுக காங்கிரஸ் கூட்டணி 1971 இல் முதன்முதலாக அமைந்தது இந்த கூட்டணி 6 முறை தேவைகளை சந்தித்து 6 முறையும் வெற்றி கண்டுள்ளது.

மத்திய அரசில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளன மாநில அரசில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 9 மாதங்களில் 24 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கும்மங்குடியில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து பேச்சு