சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்! ராகுலுடன் மோதும் ப.சிதம்பரம்!

சிவகங்கை வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இடையே மோதல் மூண்டுள்ளது.


தமிழகத்தில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்து விட்டது.

ஆனால் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர் அறிவிப்பு முன்னரே அந்த தொகுதியில் தான் தான் போட்டி என்று கூறி சிதம்பரத்தின் மகன் கார்த்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதி வேட்பாளர் என்று யார் பெயரும் குறிப்பிடப் படவில்லை. இதற்கு காரணம் ப. சிதம்பரம் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

சிதம்பரம் மாநிலங்களவை எம்பி யாக இருக்கும் நிலையில் அவரது மகனுக்கு எப்படி மக்களவைத் தொகுதிக்கான சீட் கொடுக்க முடியும் என்பது ராகுல் காந்தியின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற வேண்டுமென்றால் தனது மகனுக்கு சீட் கொடுத்தே ஆகவேண்டும் என்று ராகுலுக்கு சிதம்பரம் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது மகன் கார்த்தியை தவிர வேறு யாருக்கு சீட் கொடுத்தாலும் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற முடியாது என்று சிதம்பரம் டெல்லிக்கு திட்டவட்டமான தகவலை அனுப்பி வைத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். ஏனென்றால் சிதம்பரத்தின் மகனுக்கு கொடுப்பதற்கு பதிலாக சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை தொகுதியை கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் லாபி நடைபெற்று வருகிறது.

இதனை தெரிந்து தான் ப. சிதம்பரம் மிரட்டும் தொனியில் டெல்லிக்கு தனது மகனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று தகவல்களை மாறி மாறி அனுப்பி வருவதாக கூறுகிறார்கள். ப சிதம்பரத்தின் இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வேதங்கள் காண வேட்பாளரை அறிவிக்காமல் ராகுல் காந்தி மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளார்.

தனது மகனுக்கு சீட் கொடுக்கப்படவில்லை என்றால் மாநிலங்களவை எம்பி பதவியையும் ராஜினாமா செய்ய சிதம்பரம் தயங்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகிறார்கள்.