8 வழிச்சாலை வருவது உறுதி! சீறிய கட்கரி! தலைகுனிந்த ராமதாஸ்! அதிமுக மேடையில் பரபரப்பு!

8 வழி சாலை திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் ராமதாசை உட்கார வைத்துக்கொண்டு அத்திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.


நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலம் வந்திருந்தார். நிதின் கட்கரி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நிதின் கட்கரி, தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்க நிரந்தரமான திட்டத்தை மத்திய அரசு முன்னெடுக்க உள்ளதாக கூறினார். ஏற்கனவே கோதாவரி கிருஷ்ணா நதிகள் இணைப்புத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்த பட்டதை நிதின் கட்கரி அப்போது சுட்டிக்காட்டினார். இதேபோல் கோதாவரி காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் 60,000 கோடி ரூபாயில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

இத்திட்டத்தை விரைவில் துவங்க உள்ளதாகவும் இதற்கு தமிழக மக்கள் செய்ய வேண்டியது எல்லாம் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியது மட்டுமே என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நிதின் கட்கரி கொங்கு மண்டலத்தின் முன்னேற்றத்திற்கு சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டம் மிகவும் முக்கியம் என்று கூறினார்.

நீதிமன்றத்தின் மூலம் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்களை நீக்கி சென்னை சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் நிதின் கட்கரி உறுதிபடக் கூறினார். நிதின் கட்கரி இவ்வாறு கூறிக் கொண்டிருந்தபோது பாமக நிறுவனர் ராமதாஸ் மேடையில் அமர்ந்திருந்த படை தலை குனிந்து கொண்டார்.

ஏனென்றால் ராமதாஸ் சேலம் சென்னை பசுமை வழி சாலை திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார். அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் இத் திட்டத்திற்கு தடை விதித்த நிலையில் அதற்கான வழக்கைத் தொடுத்ததே பாமக என்பது குறிப்பிடத்தக்கது.