கோவையில் நடைபெற்ற இளையராஜா இசை கச்சேரி விழாவில் ஒரு ஐஸ்க்ரீம் விலை ரூபாய் 100 என்றும் ஒரு popcorn விலை ரூபாய் இரநூறு என்றும் கேட்போர் தலைசுற்றும் அளவிற்கு விலை வைத்து விற்கப்பட்டுள்ளது.
கோன் ஐஸ் ரூ100! பாப்கான் ரூ.200! இசைஞானிக்கு இது அடுக்குமா?
இளையராஜாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாக கூறிக்கொண்டு கோவையில் பிரம்மாண்ட இசை கச்சேரி நடத்தப்பட்டது. இளையராஜா இந்த விழாவில் கலந்துகொண்டு சிம்பொனி நடத்தினார். இளையராஜாவின் ஆஸ்தான நண்பரானார் எஸ் பி பாலசுப்பிரமணியம் முதல் பிரபல பாடகர்கள் பலர் கலந்துகொண்டு இசை விழாவை கலைகட்ட வைத்தனர்.
ஹங்கேரியில் இருந்து வந்திருந்த இசைக்குழு ஒன்று இளையராஜாவின் இசையை தங்கள் கைவண்ணத்தில் உருவாக்கி அனைவரையும் உணர்ச்சி மயமாக்கினார். இந்த விழாவுக்கான டிக்கெட் விலை ரூபாய் 1000 முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
சரி பணம் இருப்பவர்கள் சென்று இசைக் கச்சேரியை கண்டு ரசித்தனர் என்று விட்டுவிடலாம். ஆனால் ரூபாய் ஆயிரம் விலை கொடுத்து இளையராஜா கச்சேரிக்கு சென்றார் நடுத்தர மக்கள்தான் அங்கு படாத பாடுபட்டனர். அவ்வளவு பெரிய இசை நிகழ்ச்சி நடத்தியும் அங்கு இலவசக் குடிநீர் வைக்கப்படவில்லை.
ரூபாய் 20 கொடுத்து தண்ணீர் பாட்டிலை வாங்கி தான் ரசிகர்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. பசிக்கு சாப்பிடலாம் என்று கேண்டீன் பக்கம் சென்ற போதுதான் தியேட்டரை மிஞ்சும் அளவிற்கு பங்கு உணவு பதார்த்தங்கள் விலை இருந்தது. ஒரு கோன் ஐஸ் இன் விலை ரூபாய் 100 என்றும் ஒரு டப்பா popcorn விலை ரூபாய் இரநூறு என்றும் கூறி அதிர வைத்தனர்.
இதுதவிர சமோசா போண்டா போன்றவைகளின் விலையும் எக்குத்தப்பாக இருந்தது. சென்னையில் கடந்த வாரம் இளையராஜா நடத்திய இசைக்கச்சேரிகள் பேசிய அவர் ரூபாய் 1000 டிக்கெட் வாங்கிவிட்டு பத்தாயிரம் ரூபாய் டிக்கெட்டில் வந்து அமர்வது நியாயமா என்று ரசிகர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். இப்போது அதை ரசிகர்கள் ரூபாய் 1000 டிக்கெட் கொடுத்து இசையை கேட்க வந்த தங்களிடம் ஒரு ஐஸ்கிரீமுக்கு ரூபாய் 100 வாங்குவது நியாயமா என்கின்றனர்.