உங்கள் பிள்ளையிடம் இந்த ஐந்து விஷயங்களும் இருக்குதான்னு பாருங்க.. அப்பத்தான் நிறைய மார்க் வாங்கமுடியும் !!

பெரும்பாலான வீடுகளில் பெற்றோருக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை, குழந்தைகளின் படிப்பு. நல்லாத்தான் படிக்கிறான், ஆனா, எழுதும்போது மறந்துபோகிறான் என்று வருந்துகிறார்கள்.


உண்மைதான். இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் படித்ததை மறந்து போவதுதான்.  உண்மையில் ஞாபகசக்தி  என்பது ஒரு திறமை. நினைவாற்றல் நிரம்பியவர் என்று எவரும் இல்லை.  ஆனால் சரியான  பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. அவற்றை சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை

எனக்கு ஞாபகசக்தி  நன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கை முதலில் மாணவருக்கு வரவேண்டும். நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

நினைவாற்றல் என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும்  வளர்த்துக் கொள்ள முடியும். அதனால் நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் நல்ல ஞாபகசக்தியை பெறலாம்.

2. பயிற்சி

சித்திரமும் கைப் பழக்கம் என்பார்கள். அதனால் ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ளும் திறனை ஒரு பயிற்சி போன்று செய்ய வேண்டும். ஒரு முறை படித்ததை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி சொல்லிப் பார்க்கவும் எழுதிப் பார்க்கவும் வேண்டும். மீண்டும்மீண்டும் செய்யப்படும் பயிற்சி எளிதில் நினைவு சக்தியைக் கொடுக்கும்.

3.  புரிந்து படித்தல்

அர்த்தம் புரியாத பாடங்களைப் படிக்கும்போது ஞாபகத்திறன் குறைகிறது. அதனால் எது படித்தாலும் நன்கு புரிந்துபடிக்க முயல வேண்டும். படிக்கும்போது, ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொண்டு படித்தால் எளிதில் நினைவில் நிற்கும்.

4.  ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போதுதான்  நினைவுத் திறன்  நன்றாக செயல்படும்நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில்  எதையும்  நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

5.ஆசை வளர்த்தல்

நிறைய படிப்பது மட்டுமின்றி அவ்வப்போது அதனை பயன்படுத்தவும் தெரியவேண்டும். ஞாபகத் திறன் நன்றாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும். அதுதான் உங்களுக்கு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். ஆர்வத்துடன் கற்றுக்கொள்வது எளிதில் நினைவில் நிற்கும்.