ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் கட்டாய இந்தி! தமிழர்களே உங்களுக்கு தெரியுமா?

தளபதியின் ஹிந்தி எதிர்ப்பு : இதோ இப்படங்களில் உள்ள இரு பள்ளிகள் "சன் ஷைன் மாண்டிசரி" , மற்றும் "சன் ஷைன் சீனியர் செகன்டரி " பள்ளிகள்.


முதற் பள்ளியின் கரஸ்பாண்டன்ட்  திருமதி. செந்தாமரை சபரீசன் , தளபதியின் மகள். இரண்டாம் பள்ளியும் தளபதி குடும்பத்தாரின் பள்ளியே. அந்த இரண்டாம் பள்ளியின் பரிசு வழங்கும் விழாவில் திருமதி. துர்கா ஸ்டாலி்ன் அவர்கள் மற்றும் தமிழச்சி தங்க பாண்டியன் , பரிசுழங்குவதைக் காணலாம். இவ்விரு பள்ளிகளின் பாடமுறையையும் படத்தில் காணுங்கள்.

"சி.பி.எஸ்.இ" பாடத் திட்டம் . ஹிந்தியும் கற்பிக்கப் படுகிறது, இரண்டாம் மொழியாக இல்லாவிட்டாலும் , கட்டாயம் மூன்றாம் மொழியாகக் கற்றாக வேண்டும். ஹிந்தி திணிப்பிற்கு எதிராகக் குரல் எழுப்பும் தளபதியார் குடும்பத்துப் பள்ளிகள் தமிழக அரசு பாடத் திட்டத்தை "ஸ்டேட் போர்ட்"டை கடைபிடிக்க வில்லை.


ஸ்டேட் போர்டில் ஹிந்தி கட்டாயம் கிடையாது. மாறாக ஹிந்தி கட்டாயம் கற்க வேண்டிய பாடத் திட்டத்தை தான் தளபதியின் குடும்பத்தார் நடத்தும் பள்ளிகளில் பின்பற்றுகிறார்கள். ஹிந்தி கற்பதில் தவறில்லை , கற்கட்டும். ஆனால் ஏன் இந்த ஹிந்தி திணிப்பு வெளி வேஷம் ?   நானும் ஹிந்தியின் கட்டாயத் திணிப்புக்கு எதிரானவன் தான்.


ஆனால் ஹிந்தி கட்டாயமாய் சொல்லித்தரப்படும் பள்ளிகளை ஒரு புறம் நீங்களே நடத்திக்  கொண்டு, மறு புறம் ஹிந்தி திணிப்புக்கு எதிரானவர் போல் நாடகமும் நடத்தி ஊரை , நாட்டை ஏமாற்றுகிறீரே தளபதியாரே ? இதில் போராட்டம் வெடிக்கும் என்று வேறு மிரட்டல் விடுகிறீர் ! உங்களை இன்னமும் நம்பிக் கொண்டு ஒரு கூட்டம் உங்கள் பின்னால் வருகிறதே ?    " நல்ல வேளை நான் விழித்துக் கொண்டேன்" என்ற பாடல் என் நினைவுக்கு வருகிறது.