இளம் பெண்களை வைத்து விபச்சாரம்! பேராசிரியை சுந்தரவள்ளியை கேவலப்படுத்திய நாம் தமிழர் தம்பிகள்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

தோழர் சுந்தரவள்ளியின் பேச்சில் எப்போதும் அனல் பறக்கும். பெண் நிருபர் கன்னத்தைத் தொட்டபோதே கவர்னர் கையை வெட்டியிருக்க வேண்டும் என்று பேசியவர்.


பிரதமர் மோடிக்கு ஆதரவாக அத்தனை மீடியாக்களும் பணம் பெற்றுக்கொண்டு செயல்படுகின்றனர் என்று வெளிப்படையாக பேசினார். மோடிக்கு எதிராக தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்தவும் தயார் என்று சுந்தரவள்ளி கூறியதை அடுத்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி சென்னை பெருநகர ஆணையாளரிடம் பா.ஜ.க இளைஞர் அணி சார்பாக புகார் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சுந்தரவள்ளி மீது பிணையில் வெளிவர முடியாத நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறது காவல்துறை. இதுதவிர பா.ஜ.க.வினர் சுந்தரவள்ளி மீது ஆபாச குப்பைகளை அள்ளி வீசுகின்றனர்.

இந்த நிலையில் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலரும் காவல் துறைக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘‘தோழர் சுந்தரவள்ளி மீது பாலியல் பழி சுமத்தும் ஆணாதிக்க, அருவருக்கத்தக்க கோழைகள் ஒரு புறம், அவதூறுகளைச் செருப்பில் பட்ட தூசுக்குச் சமமாய்க் கருதி அவற்றை எதிர்கொள்ளும் சுந்தரவள்ளியின் வீரம் மறுபுறம்! வாருங்கள் தோழர்களே, களம் தயாராகிறது’’ என்று கூறியிருக்கிறார் சுபவீ.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கை இது. ‘‘பாலின சமத்துவம், தீண்டாமை எதிர்ப்பு, சிறுபான்மை மக்கள் உரிமைகள் தொடர்பான சமூக செயல்பாட்டாளர் பேராசிரியர் சுந்தரவள்ளி, தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக ஊடகங்களிலும் இந்துமத வெறியர்களின் குற்றச் செயல்களை அம்பலப்படுத்தி வருபவர்.

சாதிவெறி ஆதிக்கத்தை எதிர்த்து களப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருபவர். அறிவியல் கண்ணோட்டத்துடன் பேராசிரியர் சுந்தரவள்ளி முன் வைக்கும் வாதங்களை எதிர் கொள்ள முடியாத நிலையில், அவர் மீது அவதூறுக் குப்பைகளை அள்ளி வீசும் இழி செயலில் சில விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துரிமையை பறிக்க அச்சுறுத்தலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கொள்கை திறனில்லாத கோழைகளின் குற்றச் செயல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் பேராசிரியர் சுந்தரவள்ளி புகார் கொடுத்துள்ளார். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது’’ என்று கூறியிருக்கிறார்.

தோழர் சுந்தரவள்ளிக்குத் துணை நிற்போம்.