90ml படத்தில் உச்சகட்ட ஆபாசம்! காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்! விரைவில் ஓவியா கைது?

நடிகை ஓவியாவை கைது செய்ய வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


நடிகை ஓவியா நடித்துள்ள 90 ml எனும் திரைப்படம் குழந்தைகள், இளம் வயதினரை தவறாக வழி நடத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த படத்தை தடைசெய்யக் கோரி  புகார் அளிக்கப்பட்டது.

நடிகை ஓவியா, நடிகர் சிலம்பரசன் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 90ml. இந்த திரைப்படத்தில் பெண்களை ஆபாசமாகச் சித்தரித்து பெண்களை கொச்சைப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய தேசிய லீக் கட்சியினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

புகார் மனுவில் 90ml என்ற திரைப்படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாகவும்,  இந்த படத்தை இயக்கிய இயக்குனர், நடிகை ஓவியா ஆகியோர் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற படங்களை உடனடியாக தடை செய்வதன் மூலம் வளரும் தலைமுறையினர் மனதில் நஞ்சை விதைக்காமல் இருக்க இயலும் எனவும் கூறினர்

படத்தில் இளம் பெண்கள் மது அருந்துவது போலவும், சிகரெட்புகைப்பது போலவும் காட்சிகள் உள்ளன. மேலும் முதலிரவு, உடலுறவு குறித்தும் வெளிப்படையாக பெண்கள் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே ஓவியா படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.