கொரோனா நோய் அச்சுறுத்தல் நாடு முழுவதும் உருவாகியுள்ளது.
கொரோனா வருது.. முதல்ல பள்ளிகளுக்கு லீவு விடுங்கப்பா.. கம்யூனிஸ்ட் கோரிக்கை.

மிக எளிதில் பரவும் தன்மை கொண்ட கொரோனா நோய் பாதிப்பில் மாணவர்கள் சிக்கிவிடக்கூடாது. உடனே விடுமுறை விடுங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நோய் கண்டறிவதற்கான பரிசோதனை மையங்களை உடனே மாநிலத்தின் பரவலான இடங்களில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நோய் கண்டறியப்பட்டுள்ளவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கல் மாநிலத்தின் பல இடங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு உடைகள் போல் தமிழக மருத்துவர்களுக்கும் வழங்கிட வேண்டும். கொரோனா வைரஸ் நோயால், முகத்தின் அணியும் முகக் கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் கூடுதல் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. எனவே முகக் கவசங்கள் குறைந்த விலையிலும், தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தொலைபேசிகளில் அழைப்பை மேற்கொள்ளும்போது கொரோனா நோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவிப்பு ஆங்கிலத்தில் வருவதை தமிழிலும் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை தீரும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள், கேளிக்கை மற்றும் விளையாட்டுக் மைதானங்கள் (ஐபில் உட்பட), அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெறும் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.