என் திரையுலக வாழ்வை காலி செய்தவர் கமல்! நடிகர் விவேக் அதிர்ச்சி பேட்டி!

நடிகர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் விவேக் பல காமெடியனாக நடித்தவர். இவருக்கு தற்போது 57 வயது ஆகிறது. தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.


இந்நிலையில் இவர் தற்போது வெள்ளைப்பூக்கள் என்ற ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க கிரைம் திரில்லர் படமாக அமைந்துள்ளது.  இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெள்ளைப்பூக்கள் படத்தின் ப்ரெஸ் மீட் சமீபத்தில் நடந்தது..

இதில் விவேக் பலவற்றை பேசினார். குறிப்பாக கமல்ஹாசனால் தனது திரை வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பதையும் பேசியுள்ளார். இதுபற்றி அவர் பேசியதாவது  நான் நடிகர்களுடன் காமெடியனாக, துணை நடிகராக நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாகிவிட்டது. ஆனால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்கள் எப்போதும் ஓடுவதில்லை.

கடைசியாக ‘நான் தான் பாலா’ என்ற ஒரு படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தின் போது கமல்ஹாசனின் பாபநாசம் படமும் வெளிவந்தது. இரண்டு படங்களில் ஒன்றாக வெளிவந்தால் கமல்ஹாசன் எனக்கு வர வேண்டிய அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்துக் கொண்டார்.

இதனால் என்னுடைய அந்த படம் பாழாய் போனது என்று நகைச்சுவையாக பேசினார். அவர் காமெடியாக  பேசினாலும் அவருடைய ஆதங்கம் அவர் பேச்சில் தெரிந்தது.