ஜாக்கெட் அணியாமல் வந்த நடிகை! நடிகர் சதீஷ் கேட்ட பகீர் கேள்வி! விருது விழா பரபரப்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் காமெடி நடிகர் சதிஷ், நிகழ்ச்சி தொகுப்பாளர் தன்யாவை கிண்டலடித்த சம்பவம் காண்போரை முகம் சுளிக்க வைத்தது.

சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் பிரபல காமெடிய நடிகரான சதீஷ் தொகுத்து வழங்கினார்.  இவருடன் இணைந்து நடிகை தன்யா பாலகிருஷ்ணனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  நடிகை தன்யா ராஜா ராணி, ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்களில் சப்போர்டிங் வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் கலகலப்பாக நடைபெற்ற சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை தன்யா,  சதீஷ் அணிந்து வந்த ஜாக்கெட்டை கிண்டல் அடித்தார்.  இந்த ஜாக்கெட் பொதுவாக ஆண்கள் அனைவருமே அணிய கூடியது தான்.  இருப்பினும் நிகழ்ச்சி கலகலப்பாக இருக்க வேண்டும் என இத்தகைய செயலில் ஈடுபட்டார் நடிகை தன்யா.

உடனே நடிகர் சதீஷும், தன்யாவை பதிலுக்கு கிண்டல் அடிக்க ஆரம்பித்துவிட்டார். மேடையில் நின்று பேசிக்கொண்டிருந்த தன்யாவை சற்று திரும்பி டிஜிட்டல் போர்டில் உள்ள வாக்கியத்தை படிக்குமாறு  கூறினார். உடனே பின்னால் திரும்பிய தன்யாவை, அவர் அணிந்து வந்த உடையை வைத்து கிண்டல் அடித்தார். 

காரணம் தன்யா மிகவும் லோ நெக் கொண்ட வெள்ளை நிற உடையை அணிந்து இருந்தார். அதை பார்த்த சதீஷ் " உண்மையில் ஜாக்கெட் அணிய வேண்டியது நான் இல்லை, தன்யா தான் " என்று நக்கலாக கூறினார். காமெடிக்காக நடிகர் சதிஷ் செய்த இந்த செயல், அங்கு இருந்தவர்களுக்கு சிரிப்பு வரவைக்கவில்லை.  மாறாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு முகம் சுளிப்பை ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும்.