ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கிண்டல் செய்து துணிச்சல் வீடியோ! ஜெயம் ரவிக்கு குவியும் பாராட்டு!

சென்னை: ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தில் ரஜினியை கிண்டல் செய்துள்ளதாக. சினிமா ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.


பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கோமாளி.  இந்த படத்தில் ஜெயம் ரவி 9 விதமான வேடங்களில் நடிக்கிறார்.

ஆகஸ்ட் 15 சுதந்திர தின நாளில் கோமாளி படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது அந்த படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. 2.15 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் 16 ஆண்டுகள் கோமாவில் இருந்து எழும் ஜெயம் ரவி, இன்னமும் ரஜினி கட்சி தொடங்காமல், அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறிவரும் அறிவிப்பை கிண்டல் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பலரும் இலைமறை காயாக விமர்சிப்பது வழக்கம்தான். ஆனால், வெளிப்படையாகவே ஜெயம் ரவி ரஜினியை கிண்டல் செய்துள்ளதும், 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி வருவதை கலாய்த்திருப்பதும் முக்கியமான விசயமாக பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவியின் இந்த துணிச்சலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. ஆனால் ஆதரவு தான் அதிகமாக உள்ளது. வழக்கமாக திரைப்படங்களில் ரஜினியை பெருமையாக பேசித்தான் நடிகர்கள் விளம்பரம் தேடுவார்கள். சத்யராஜ் உள்ளிட்ட ஒரு சில சீனியர் நடிகர்கள் தான் ரஜினியை திரையில் இதுவரை கலாய்த்துள்ளனர்.

ஆனால் இளம் தலைமுறை நடிகர் ஒருவர் ரஜினியை கலாய்த்திருப்பதில்  லாஜிக் இருப்பதால் ஆதரவு அதிகரித்துள்ளது. ஆனால் இதனை இப்படியே விடக்கூடாது என்று ரஜினி ரசிகர்கள் டென்சன் ஆகி வருகின்றனர்.