கையில் சரக்கு..! வாயில் சைடிஸ்..! ஆண் நண்பனுக்கு 3 கல்லூரி மாணவிகள் வைத்த செம ட்ரீட்..! மயிலாடுதுறை அதிர்ச்சி!

கல்லூரிச் சீருடையில் மாணவிகள் சிலர் மதுபானம் அருந்து வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து அவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் 4 பேரும், ஒரு இளைஞரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு மதுபானம் அருந்துகின்றனர். மதுபானக் கூடம் போலவே சரக்குக்கு தேவையான பொட்டலம், ஆம்லெட், கறி உள்ளிட்ட சைடீஷ் வைத்துக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.

இதை குடிபோதையில் இருந்த ஒருபெண் வீடியோவாகவும் எடுத்து தங்களது நெருங்கிய தோழிகளுக்கு மட்டும் அனுப்பி உள்ளார். பொதுவாக பெண்கள் தாங்கள் உடுத்தி யிருக்கும் உடை, நகை மேக்கப் இவற்றைத்தான் பெருமை காட்டிக்கொள்ள வீடியோ எடுத்து அனுப்பி மற்ற பெண்களின் பொறாமைக்கு ஆளாவார்கள். இவர்கள் ஒரு படிமேல் சென்று குடித்துவிட்டு எப்படி சந்தோஷமாக இருக்கிறோம் என்று பீத்திக்கொள்ள அந்த வீடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர். இந்த வீடியோ நாகை மாவட்டம் முழுவதும் தீயாய் பரவ, சமுக வலைதளங்களில் சந்தி சிரிக்க வைத்துள்ளது. 

மாணவிகள் அனைவரும் கல்லூரி சீருடையில் இருந்ததால் எளிதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை இனி படிக்க வரவேண்டாம், குடித்து விட்டு கும்மாளம் அடிங்கள் என்பதுபோல் டிஸ்மிஸ் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். இதனால் மனமுடைந்த மாணவி ஒரு தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.