மென்டல் ஹாஸ்பிடலில் நிர்மலா தேவி! அதிர வைக்கும் காரணம்! என்னாச்சு தெரியுமா?

அருப்புக்கோட்டை கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்டதே அதற்கு காரணம் என அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்


அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி மேலதிகாரிகளுக்காக மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து தொடர்பான ஆடியோ பரவியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு நடந்து வந்த நிலையில் அண்மையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது 

அண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர்  மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக அழைத்துவரப்பட்ட நிர்மலா தேவியின் நடவடிக்கைகள் வினோதமாக இருந்தன. அவர் நீதிமன்ற அறையை சுற்றிச்சுற்றி வெறித்துப் பார்த்ததாகவும் தான் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக உளறியதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற அறையில் தியானம் செய்வது போல் அமர்ந்து இருந்ததாகவும் வினோதமான பூஜைகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக சிபிசிஐடி விசாரணையின்போது அவர் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ள அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அதன் காரணமான நீண்ட மன அழுத்தமே அவரை இந்த நிலைக்கு ஆளாகி இருப்பதாக கூறினார். அவருக்கு நெல்லையில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.